தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜெயமாலினி. இவர் தமிழில் பிரபலமான கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் சகோதரி ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஜோதிலட்சுமியுடன் ஒப்பிடும்போது தமிழில் குறைவான படலங்களிலேயே இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விட்டலாச்சாரியார் படங்களில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் புகழ்பெற்ற இவர் பார் டான்சராக தனது வாழ்க்கையை துவக்கியவர். சினிமாவில் புகுந்து கவர்ச்சி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஜெயமாலினி 1994 ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரி பார்த்திபன் என்பவரை திருமணம் செய்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இந்த தம் மகன் இருக்கின்றார் . .
தற்போது தனது மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ள இவர் அவரது திருமணத்தை சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள விஜிபி கோல்டன் பீச்சில் உள்ள ரிசார்ட்டில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் ஜெயமாலினி மற்றும் பார்த்திபன் தம்பதியினர். இவர்களது திருமணம் நாளை நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்காக ஜெயமாலினி மற்றும் பார்த்திபன் தம்பதியினர் தமிழ் சினிமா உலகின் முக்கிய நட்சத்திரங்களுக்கு பத்திரிக்கை வைத்து அழைப்பு கொடுத்துள்ளனர். இதனால் நாளை கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் தமிழக நட்சத்திர பட்டாளங்களின் அணிவகுப்பாக இருக்கும். இவரது மகன் ஷியாம் ஹரி பெயிண்டில் பட்டப் மேற்படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மணப்பெண் ஐஐஎம்மில் எம்பிஏ படித்திருக்கிறார். இவர்களது திருமணம் நாளை விஜிபி கோல்டன் பீச் ரிசார்டில் வைத்து விமரிசையாக நடைபெற இருக்கிறது.