fbpx

தமிழ்நாட்டில் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் பொது விடுமுறை..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறும் நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுகளுக்கு 7,93,966 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ 2,763 தேர்வு மையங்களில் தேர்வர்கள்‌ எழுதவுள்ளனர். குரூப் 2 தேர்வில் மொத்தம் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ தேர்வில் மொத்தம் 1,820 பணியிடங்களுக்கும் என மொத்தம் 2,327 பணியிடங்களுக்கு நாளை தேர்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட காலாண்டு நாட்காட்டியைக் குறிப்பிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு நடத்த ஏதுவாக பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதால், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : மேனேஜர் முதல் தயாரிப்பாளர் வரை..!! பாப்புலர் ஆன பிறகு பிடித்தவருடன் மட்டுமே அட்ஜஸ்ட்மெண்ட்..!! புட்டு வைத்த பிரபலம்..!!

English Summary

The School Education Department has announced that tomorrow (Saturday) will be a holiday for all schools in Tamil Nadu.

Chella

Next Post

தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து சொந்த ஊர் படையெடுக்கும் மக்கள்..!! அலறவிடும் ஆம்னி பேருந்து கட்டணம்

Fri Sep 13 , 2024
Omni bus fares have skyrocketed in Tamil Nadu due to the ongoing holiday.

You May Like