தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக பிப்ரவரி 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக பிப்.24 முதல 28 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பிப்.24-ல் மாதவரம், ஆர்.கே. நகர், திருவிக நகர், கிண்டி, மயிலாப்பூர், தி.நகர் பகுதிகளில், பிப்.25-ம் தேதி மாதவரம், பெரம்பூர், திரு.வி.க நகர்- வ.உ.சி நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டம் பகுதிகளில் நடந்து முடிந்தது.
மேலும் நேற்றைய தினம் மாதவரம், எழும்பூர், அம்பத்தூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகள் நடந்து முடிந்தது, இன்று மாதவரம், ஆர்.கே.நகர், அண்ணா நகர், எழும்பூர், மயிலாப்பூர், விரு கம்பாக்கம் திட்டம் பகுதிகளிலும், நாளை மாதவரம், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், தி.நகர், சைதை திட்டப் பகுதிகளில் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.