fbpx

பிறந்தநாளன்று எரித்து கொலை செய்யப்பட்ட ஐ டி ஊழியர்.! திருநங்கை வெறி செயல்.!

ப்ரேக் அப் ஐடி பெண் ஊழியர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக திருநங்கையை கைது செய்த காவல்துறை அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் நந்தினி. 28 வயதான இவர் வெற்றி என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் வெற்றி என்பவர் திருநங்கை என நந்தினிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரிடம் பழகுவதை நிறுத்திய நந்தினி ஒரு கட்டத்தில் வெற்றியுடனான காதல் வேண்டாம் என முடிவு செய்து அவரை பிரிந்து விட்டார்.

இதனால் கடும் மன உளைச்சலிலும் ஆத்திரத்திலும் இருந்திருக்கிறார் திருநங்கை வெற்றி. இதனைத் தொடர்ந்து தனது காதலி நந்தினி பழிவாங்க சூழ்நிலை எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். இந்நிலையில் நந்தினியின் பிறந்தநாள் வந்திருக்கிறது. அதற்கு சர்ப்ரைஸ் தருவதாக கூறி நந்தினி தனி இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். வெற்றியை நம்பி அவருடன் சென்று இருக்கிறார் நந்தினி .

இதனைத் தொடர்ந்து நந்தினியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார் வெற்றி. இந்த சம்பவத்தில் தீயில் கருகி துடித்து பலியானார் நந்தினி . இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் இறந்த நந்தினி உடலை கைப்பற்றி பெரித பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் திருநங்கை வெற்றி. இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

துடிக்க துடிக்க தாய்க்கு நேர்ந்த கொடூரம்.! கண்ணை மறைத்த மது போதை.! மகன் வெறி செயல்.!

Sun Dec 24 , 2023
தென்காசி மாவட்டத்தில் தாய் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மகன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் கொலையாளியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமுத்து இவரது மனைவி ராமலட்சுமி(65). இவர்களது மகனான சங்கரநாராயணன்(43) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. அடிக்கடி மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் […]

You May Like