fbpx

அத்துமீறிய அரசு மருத்துவர்..!! வீடியோ ரெக்கார்ட் செய்து மாட்டிவிட்ட செவிலியர்கள்..!! உடை மாற்றும் அறையில் நடந்த ஷாக் சம்பவம்..!!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவரான டாக்டர் சுப்பையா சண்முகம், செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது, தற்போது மருத்துவமனை விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை பிரிவு தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே வசிக்கும் பெண் ஒருவர், வீட்டின் முன்பு குடிபோதையில் டாக்டர் சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்ததாக புகார் அளித்துள்ளார். புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் கூறுகையில், ”ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டாக்டர் சுப்பையா சண்முகம், அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்தார். அப்போது, அறுவை சிகிச்சை அறையின் அருகே செவிலியர்களின் உடை மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவருடன் அறுவை சிகிச்சையின் போது மருத்துவ உதவி செய்த செவிலியர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட செவிலியர் வெளியில் சொல்ல முடியாமல் இருந்தார். பிறகு செவிலியர்கள் டாக்டர் மீது புகார் அளிக்க வேண்டுமென்றால், உரிய ஆதாரம் வேண்டும். எனவே, ஆதாரத்தை திரட்டும் வகையில், யாருக்கும் தெரியாமல் செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமரா வைத்துள்ளனர். அப்போது வழக்கம் போல் டாக்டர் சப்பையா சண்முகம், செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றார். ஆனால், அந்த செவிலியர் சாதுரியமாக அவரிடம் இருந்து தப்பி வெளியே வந்துவிட்டார். பிறகு நடந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட செவிலியர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆயிஷாவிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர்.

அதன்படி அவர், சுப்பையா சண்முகத்திடம் மருத்துவமனை விசாகா கமிட்டி விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாகா கமிட்டி, கடந்த 2 மாதத்திற்கு மேல் புகார் அளித்த செவிலியர்கள் மற்றும் டாக்டர் சுப்பையா சண்முகத்திடம் 3 முறைக்கு மேல் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதேநேரம் விசாகா கமிட்டியின் அறிக்கையை ஓரிரு நாளில் மருத்துவ கல்வி இயக்குநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், டாக்டர் சுப்பையா சண்முகம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விசாகா கமிட்டியின் அறிக்கையை நீர்த்து போக செய்ய பல வகையில் முயற்சி செய்து வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் வெளியில் தெரியாமல் ரகசியமாக இருந்து வந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகியுள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரகம் சுப்பையா சண்முகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” இவ்வாறு செவிலியர்கள் தெரிவித்தனர்.

ஆர்எஸ்எஸ்சின் ஒரு பிரிவான ஏபிவிபி மாநில தலைவராக டாக்டர் சுப்பையா உள்ளார். இவர், வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில், பெண்ணின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தினார். இதுகுறித்து ஆதாரத்துடன் புகார் செய்யப்பட்டதால், அவர் கைதானார். பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் பணியில் சேர்ந்தார். தற்போது அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’ரத்தம் வடிய வடிய சித்ரவதை’..!! நடிகைக்காக ரசிகரை கொன்ற நடிகர்..!! பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷாக்..!!

English Summary

Dr. Subpaiah Shanmugam, head of cancer department at Chennai Rayapetta Government Hospital, has been reported to have misbehaved with the nurses. The Hospital Visakha Committee is currently investigating the complaint.

Chella

Next Post

ஷாக்!. விபத்தில் சிக்கிய மெக்சிகோ அதிபரின் வாகனம்!. ஒருவர் உயிரிழப்பு!.

Sat Jun 15 , 2024
Car In Mexican President-Elect Claudia Sheinbaum's Convoy Collides With Another, 1 Dead

You May Like