நமது உடலில் வெளிப்புறத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அது நமது உடலுக்குள் இருக்கும் பிரச்சனையை தான் பல நேரங்களில் குறிக்கும். ஆனால் நாம், வெளிப்புற அழகில் மட்டுமே கவனம் செலுத்தி அதிக விலை கொடுத்து பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். அந்த வகையில், ரத்தத்தில் அதிக அளவு டாக்ஸ்சின்ஸ் சேரும் போது, அது பல நோய்களை ஏற்படுத்தும். இதனால் தான் நமது வெளிப்புற உடலை சுத்தமாக வைத்திருப்பது போல், உடலுக்குள் இருக்கும் ரத்தத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நமது ரத்தம் சுத்தமாக இருந்தால் தான் நாம் இளமையாக இருப்போம். ரத்தத்தில் டாக்சின்ஸ் அதிகம் இருக்கும் போது, நமது உடல் சோர்வாகவும், தோல் வறட்சியாகவும் இருக்கும். அது மட்டும் இல்லாமல், தோளில் அரிப்பு, தோளில் ஆங்காங்கே கருமை, சொரியாசிஸ், கொழுப்பு கட்டிகள் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும். ரத்தத்தில் டாக்ஸினஸ் இருப்பதால் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படுவது மட்டும் இல்லாமல், சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. ஆம், குறிப்பாக சிறுநீரக கல் உருவாக அதிக வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, நரம்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, கை நடுக்கம், ரத்த ஓட்ட பாதிப்புகளும் ரத்தத்தில் டாக்ஸின் இருந்தால் ஏற்படும். அதுமட்டுமின்றி, இதயத்திற்கு ரத்த ஓட்டம் செல்வதில் கூட பிரச்சனை ஏற்படலாம். ஆம், இது கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், இது தான் உண்மை. இதனால் முடிந்த வரை நமது ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சரி, இப்போது ரத்தத்தை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்று பார்ப்போம்..
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை ஆறு மாதத்திற்கு ஒருமுறை 21 நாட்கள் எடுத்துக் கொள்வதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இதற்கு முதலில், உலர்ந்த திராட்சையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலையில், உலர்ந்த திராட்சையை எலுமிச்சை சாறு, துளசி, ஆகிய மூன்றையும் நன்கு அரைத்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இப்படி தொடர்ந்து செய்து வருவதால், நமது ரத்தம் சுத்தம் ஆவது மட்டும் இல்லாமல், வயிற்றையும் சுத்தம் செய்ய முடியும். குறிப்பாக, இதில் சர்க்கரை சேர்க்க கூடாது, வேண்டும் என்றால் தேன் கலந்தும் குடிக்கலாம்..
Read more: கருப்பு நிற பிரா அணிவதால் புற்றுநோய் வருமா..? உண்மை என்ன..?