தேர்தல் அறிவிப்புக் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 7 கட்டங்களாக தேர்தல் – ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் அறிவிப்புக் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட நிர்வாகிகளுடன் தினம் தோறும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக் காரணமாக, இன்று முதல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.