fbpx

Breaking: கனமழை காரணமாக மேலும் இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…! முழு விவரம்

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று 7 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என நேற்ற அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பெய்து வரும் கனமழையால் இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பேர் வரும் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

தமிழகமே‌..! நெருங்கும் தீபாவளி... இதை பயன்படுத்தினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்...! அரசு கொடுத்த எச்சரிக்கை...!

Sat Nov 4 , 2023
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு, காரவகைகளுக்கு சீட்டு நடத்துவோர் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் விண்ணப்பித்து கட்டாயம் உரிமம் பெற வேண்டும். ஏற்கனவே உரிமம் பெற்றிருந்தால் புதுப்பித்திருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் தயாரிப்பது கண்டறியப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். […]

You May Like