திருச்சியில் நடந்த சாலை விபத்தில் வடமாநிலத்தைச் சார்ந்த இரண்டு தனியார் நிறுவன ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர்கள் முஹம்மது அஜீஸ் மற்றும் விஜேஷ் மிஸ்ரா. இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள மணிகண்டம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தனர். இருசக்கர வாகனத்தின் மூலம் தங்கள் அலுவலகம் செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இவர்கள் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது திருச்சி மதுரை மெயின் ரோட்டில் எதிரே வந்த கார் இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகிறது காவல்துறை. மதுரை திருச்சி மெயின் ரோட்டில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சி மதுரை மெயின் ரோடு, திருச்சியின் பிரதான சாலை என்பதால் அப்பகுதியில் வாகன நெரிசல் எப்போதுமே அதிகமாக இருக்கும். இதனால் விபத்தின் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.