மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாராய வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த நபர் இதனை செய்துள்ளார். சாராயம் வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த ஆண்டு மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, இனி கள்ளச் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் முதலிய குற்றச் செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்காகப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது.
மனிதர்கள் அருந்துவதற்கு ஏற்றத்தக்க வகையில் இயல்பு மாற்றப்பட்ட சாராவியை (denatured spirit) மாற்றினால் அல்லது மாற்ற முயற்சி செய்தால், அதற்கு இதுவரை மூன்று ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும் என சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாராய வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த நபர் இதனை செய்துள்ளார். சாராயம் வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்தனர்.