fbpx

பள்ளியிலும் சாதிய வன்மம் – பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவிகள்! ஆசிரியர் சஸ்பெண்ட்!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அருகே பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, இந்தப் பள்ளியில் தொப்பம்பட்டி பகுதியைச் சார்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இருக்கும் ஆசிரியை ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகளை அவர்களின் சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக தெரிகிறது மேலும் பள்ளியின் பேருந்துகளிலும் குறிப்பிட்ட ஊரைச் சார்ந்த மாணவிகளுக்கு சாதிய அடிப்படையில் இருக்கைகள் மறுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆசிரியை தங்களை ஜாதி ரீதியாக இழிவாகப் பேசியதால் மனம் உடைந்த இரண்டு மாணவிகளும் பள்ளியின் கழிவறைக்குச் சென்று கழிவறை தூய்மை செய்ய வைத்திருந்த பினாயிலை எடுத்து குடித்து விட்டனர். இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக இரண்டு மாணவிகளையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது. தற்போது மாணவிகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக குறிப்பிட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். அந்த ஆசிரியையும் தற்போது பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக நீதியின் பிறப்பிடமாக விளங்கும் தமிழ்நாட்டிலும் ஆசிரியை ஒருவர் மாணவிகளை சாதிய ரீதியாக இழிவு செய்த செயல் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Rupa

Next Post

சிகரெட் பிடிப்பதை நிறுத்த உதவும் ஸ்மார்ட் நெக்லஸ்!... சிகாகோ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

Sat Feb 18 , 2023
ஒரு நபர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட்டுகளை புகைக்கிறார், அதனை எவ்வளவு சுவாசிக்கிறார் என்பதை கண்டறியும் வகையில் புகைப்பிடிக்கும் அளவை மதிப்பிடும் வகையில் ஸ்மார்ட் நெக்லஸ் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர். அதன்படி, அமெரிக்காவில் ஆண்டுதோறும் 4,80,000 க்கும் அதிகமானோர் புகைபிடித்தல் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், முந்தைய அமைப்புகளை விட அதிக நம்பகத்தன்மையுடன், […]

You May Like