தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க காதலியின் குடும்பத்தார் முயற்சித்ததால், காதலியின் தந்தையை கொலை செய்ய முயற்சித்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
அதாவது, கடந்த 2013 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே இருக்கின்ற அணைக்கரை பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை, போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்தப் பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் தந்தை சுருளிராஜ் சுபாஷினியை வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
இது பற்றி கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்த கார்த்திக், காதலியின் வீட்டில், ஏதாவது துர்சம்பவம் நடைபெற்றால், காதலியின் திருமணம் நின்று விடும் என்று நினைத்து, ஒரு திட்டமிட்டார். அதாவது, காதலியின் தந்தை சுருளிராஜனை கார்த்திக் மற்றும் அவருடைய நண்பரான சுகுமார் உள்ளிட்ட இரண்டு பேரும், சேர்ந்து, கடந்த 2013 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சுருளிராஜனை வழிமறித்து, கத்தியால், குத்தி கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆனால், இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுருளிராஜன் தேனி நகர் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது பற்றி விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், இருக்கின்ற தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில், விசாரணை அனைத்தும், முடிவடைந்த நிலையில், இந்த சம்பவத்தில், தொடர்புள்ள கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர் உள்ளிட்ட இருவரும் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டது. ஆகவே குற்றவாளிகள் இருவருக்கும் தலா 7 வருட காலங்கள் சிறை தண்டனையும், மேலும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதோடு, அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் ஒரு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.