மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும் , சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் கடந்த அக். 12 ஆம் தேதி நடைபெற்ற தசரா விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னரே உத்தவ் தாக்கரேக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இதய தமனிகளில் ஏற்பட கூடிய அடைப்புகளை அடையாளம் காணும் பரிசோதனையை மேற்கொண்டு வருகிறார். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக உத்தவ் தாக்கரேக்கு ஆஞ்சியோபிளாஸ்டியின் பாதிப்பு இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2012ல் உத்தவ் தாக்கரேவுக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது இதயத்தில் மூன்று முக்கிய தமனிகளில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய மருத்துவர்கள் 8 ஸ்டென்ட்களை வைத்துள்ளனர். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில், அவர் ஆஞ்சியோகிராபி சிகிச்சைக்கு பிறகு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உத்தவ் தாக்கரே தமனி அடைப்புகளை அகற்றுவதற்காக இதுவரை இரண்டு முறை ஆஞ்சியோபிளாஸ்டிக்கு உட்படுத்தப்பட்டார். கிட்டத்தட்ட 60 சதவிகிதம் தடுக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Read more ; நீங்களும் உயில் எழுதி வைக்கப் போறீங்களா..? அப்படினா கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!