fbpx

“உதயநிதியை பேச விட்டா போதும் திமுகவை அழிச்சிடலாம்” – பாஜக அண்ணாமலை சர்ச்சை பேட்டி.!

திமுகவை இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தான் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் இந்தி குறித்தான பிரச்சனையை கையில் எடுத்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழிவு உதயநிதி ஸ்டாலினால் உருவாகப் போகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேட்டியளித்திருக்கும் அவர் இந்தியா கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் பீகாரின் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் செயல்பட்டு வருகிறார். திமுக வெளியேறினால் அவர்களது கட்சிக்கு கூடுதலாக 40 சீட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். தமிழகத்தில் இந்தியை வைத்து அரசியல் செய்யும் திமுக நிதீஷ் குமார் முன்னாள் அமைதியாக இருக்கிறது.

டி ஆர் பாலு மற்றும் மு க ஸ்டாலின் இருவரையும் ஹிந்தி படித்துவிட்டு வாருங்கள் என்று நிதீஷ் குமார் கூறிய பிறகும் திமுக அமைதியாக இருப்பதற்கு என்ன அர்த்தம்.? என கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் உதயநிதி ஸ்டாலின் குறித்து தொடர்ந்து பேசிய அண்ணாமலை சனதான தர்மத்தை பேசி அவர்களது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மூன்று மாநிலங்களில் தோல்வியை வாங்கித் தந்திருக்கிறார், உதயநிதி. தற்போது அவர் நிதி அமைச்சரை பார்த்து உங்கள் அப்பன் வீட்டுக் பணத்தையா கேட்டோம் எனக் கூறியிருக்கிறார்.

இதற்கான பின்விளைவுகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வருகின்ற லோக்சபா தேர்தலில் சந்திக்கும் என தெரிவித்துள்ளார். 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திமுக எனும் கட்சியை அழிப்பதற்காகவே அவதாரம் எடுத்திருக்கிறார் உதயநிதி. அவர் தொடர்ந்து பேசி வந்தால் திமுக அதுவாகவே அழிந்துவிடும். திமுக என்ற கெட்ட சக்தி அழிவது மக்களுக்கு நல்லது தான் எனவும் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

Next Post

கொரோனா JN-1: மீண்டும் வருகிறதா லாக்டவுன்.? ஆய்வாளர் கூறிய தகவல் என்ன.?

Sun Dec 24 , 2023
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனாவின் புதிய வகையான JN-1 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மகாராஷ்டிரா கோவா மற்றும் பெங்களூர் பகுதிகளிலும் இந்த புதிய வகை கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்களும் சுகாதார துறையும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் கொரோனா நோய் தொற்றிற்கு எதிரான தடுப்பு […]

You May Like