நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும், பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றும், பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதன்படி, UCO Bank வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த வங்கியில் FLC counsellors பணிகளுக்கு பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் கொள்ளும் விண்ணப்பதாரர்கள், மிக விரைவாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இந்த பணி தொடர்பான முழுமையான விவரங்களையும், இந்த செய்தி குறிப்பின் மூலமாக தொகுத்து வழங்கி இருக்கிறோம்.
இந்த பணிக்கு வர விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், graduate degree பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 25000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் interview மூலமாக, தேர்வு செய்யப்படுவார்கள். அத்துடன், இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை சரியான முறையில், பூர்த்தி செய்து தேவைப்படும் ஆவணங்களோடு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரிக்கு, வரும் 8-9-2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.