Rajnath Singh: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அதிகாலை, முதுகு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள பழைய தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் கண்காணிப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிலையாக உள்ளதாகவும், நாளை (வெள்ளிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, எம்.ஆர்.ஐ. நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அமோல் ரஹேஜாவின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலை குறித்து நரம்பியல் துறை இன்னும் கூடுதல் தகவல்களை வழங்கவில்லை.
ராஜ்நாத் சிங் ஆந்திராவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது இதேபோன்ற வலியைப் பற்றி புகார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More: என்னது.. ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா? 69 குழந்தைகளை பெற்றெடுத்த ரஷ்ய பெண்..!! – கின்னஸ் சாதனை
இந்தியாவில் 1.9 லட்சம் X கணக்குகளுக்கு தடை!! – எலோன் மஸ்க் அதிரடி