மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் 16-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்.
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் போட்டியிடும் கூட்டணி கட்சி மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஏற்கனவே நாகப்பட்டினம், நாமக்கல் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த நிலையில் திட்டமிட்டபடி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் 16-ம் தேதி சேலத்தில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார்.
ஏப்ரல் 16-ம் தேதி மதியம் 12.45 மணிக்கு ஈரோட்டுக்கு வருகை தரும் அவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார். பின்னர் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பிற்பகல் 2 மணியளவில் அவர் சாலைப் பேரணி நடத்துகிறார்.
மேலும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு மாலை 4 மணியளவில் சிங் சென்று பாஜக வேட்பாளர் கே.வசந்தராஜனுக்கு ஆதரவாக சாலைப் பேரணி நடத்துகிறார். ஆனால், பா.ஜ.,வின் அண்ணாமலை போட்டியிடும் கோவை லோக்சபா தொகுதியில், ராஜ்நாத் சிங், ரோட்ஷோ நடத்தவோ, பிரசார கூட்டத்தில் பேசவோ, திட்டமிடவில்லை.