fbpx

அடி தூள்…! எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 95% அதிகரிப்பு…! முழு விவரம் இதோ….

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதன் மூலம் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது; 2014 ஆம் ஆண்டில் 377-ஆக இருந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 655 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்தம் 69 சதவீத உயர்வாகும். இதேபோல், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 95 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதாவது, 2014 ஆம் ஆண்டிற்கு முன்பு, 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை தற்போது 1,00,163 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் மருத்துவ முதுகலைப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையும் 110 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ இடங்கள் 11,275 ஆக உள்ளது. அதேபோல் முதுகலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 4935 ஆக உள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் சார்பில் சிஎஸ்எஸ் (மத்திய அரசின் நிதித்திட்டம்) திட்டத்தின்படி, செயல்பாட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசின் பங்களிப்பாக 90 சதவீத உதவியுடன் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.

Vignesh

Next Post

கொடிய நோய்களை தீர்க்கும் தேங்காய் பூ!... இத்தனை நன்மைகளா?...

Sun Feb 12 , 2023
தேங்காய் பூவில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் அதிலுள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய உயிரை பறிக்கும் கொடிய நோய்களுக்கு மருந்தாகிறது. மேலும் இதில் உள்ள நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் இளநீர், தேங்காய் மற்றும் தேங்காய் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை விட மிக அதிகளவிலான ஊட்டச்சத்துக்களை கொண்டது தேங்காய் பூ. அதன்படி, இந்த பூவில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட் சருமத்தை பொழிவுடனும், சுருக்கங்கள் இல்லாமலும் இளைமையை தக்கவைத்துக்கொள்ள […]

You May Like