fbpx

“நோயும் குணமாகவில்லை செலவும் அதிகமாகிறது”! டெல்லியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு !

டெல்லியைச் சார்ந்த 24 வயது இளைஞர் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய தலைநகரான டெல்லியில் ஆதர்ஷ் நகரைச் சார்ந்தவர் நித்திஷ். 24 வயது இளைஞரான இவர் நீண்ட நாட்கள் நோயினால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். நோய் குணமடையாமல் தொடர்ந்து இவருக்கு சிகிச்சை தேவைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார் அந்த இளைஞர். நோயும் குணமடையவில்லை ஆனால் மருத்துவர் செலவும் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது. இதன் காரணமாக மிகுந்த விரக்தியில் இருந்த அந்த இளைஞர் தனது வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்து டெல்லியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்.

கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் ஹோட்டலில் அரை புக் செய்திருக்கிறார் நிதிஷ். இந்நிலையில் அவரது அறையை சோதித்த பணியாளர்கள் முகத்தில் பிளாஸ்டிக் பையை சுற்றி ஆக்சிஜன் சிலிண்டரில் இணைக்கப்பட்ட டியூப்பை தனது மூக்கில் நுழைத்து வைத்தவாறு இறந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். காவல்துறையின் விசாரணையில் அந்த நபர் அதிகளவு ஆக்சிஜனை சுவாசிக்க செய்து அதன் மூலம் மூச்சு விட சிரமப்பட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் அவரது அறையில் இருந்து தற்கொலைக்கான கடிதம் ஒன்றையும் கைப்பற்றி இருக்கிறது காவல்துறை. அந்தக் கடிதத்தில் எனது நீண்ட நாள் நோயின் காரணமாகவும் அவற்றிற்கான மருத்துவ செலவு ஆகியவற்றால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி இருக்கிறார். அவரது உடலை கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

"நாம் எல்லாம் வேறு உலகத்துக்கு போகலாம் வாருங்கள்"! மூடநம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம்!

Wed Mar 22 , 2023
சுவிட்சர்லாந்து நாட்டில் மூடநம்பிக்கையால் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிடைய செய்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த சம்பவம் தொடர்பாக தற்போது பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த வருடம் இதே மார்ச் மாதம் 24 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் மான்ட்ரக்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏழாவது மாடியிலிருந்து 8 வயது சிறுமி, 15 வயது சிறுவன் அவர்களது […]

You May Like