fbpx

பிரசவமான பெண்களின் மனச்சோர்வுக்கென முதன்முதலாக மாத்திரை ஒன்றை அங்கீகரித்துள்ளது அமெரிக்கா

பிரசவத்திற்கு பின்பு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லி மாளாது. அதில் மிகப்பெரிய பிரச்சனை மனச்சோர்வு. பிரசவம் முடிந்த பின்னர் குழந்தையை கவனிக்க பழகுவது, தூக்கமின்மை, உடல் சோர்வு, புதிதாக சூழல்களை எதிர்கொள்வது போன்றவை இயல்பாகவே மனச்சோர்வை அதிகரிக்கும் காரணிகளாக உள்ளன. இதற்கு முறையாக உணவு உட்கொண்டு, ஓய்வு எடுப்பதே தீர்வாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பிரசவகால மனச்சோர்வுக்கு தீர்வாகும் வகையில் மருந்து ஒன்றை அங்கீகரித்துள்ளது.

Zuranolone எனும் இந்த மருந்தை சாப்பிட்ட பின்பு 50 mg அளவில் ஒரு நாளைக்கு ஒரு முறை என 14 நாட்களுக்கு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரை உட்கொண்ட மூன்று நாட்களுக்குள் போதுமான மாற்றத்தை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் FDA இந்த மருந்து பெட்டிகளின் லேபிளில், ஒரு நபரின் வாகனம் ஓட்டும் மற்றும் ரபாயகரமான செயல்களை செய்யும் திறனை இந்த மாத்திரை பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் தூக்கம், தலைசுற்றல் வயிற்றுப்போக்கு, சோர்வு போன்றவை இந்த மாத்திரை எடுத்துக் கொள்வதால் வரும் பொதுவான பக்க விளைவுகள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Maha

Next Post

விடுதலையாகும் நேரத்தில் தப்பியோடிய இளைஞர்..!! 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!!

Mon Aug 7 , 2023
ஷுனேதிரிக் ஹாஃப்மன் என்ற இளைஞர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டார். 7 ஆண்டுகால சிறை தண்டனை முடிவுக்கு வரும் நிலையில் இருந்ததால், நல் போதனைகளை வழங்கும் நோக்கத்தில் சீர்திருத்த மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், எஞ்சிய காலத்திற்கு பொறுமை காக்க முடியாமல் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் 3 பேரை பிடித்து துப்பாக்கி முனையில் 3 மணி நேரம் பிணையக் கைதிகளாக […]

You May Like