fbpx

பயங்கரம்…! இந்தியாவையே உலுக்கிய வாச்சாத்தி பாலியல் பலாத்கார சம்பவம்…! வழக்கு பின்னணி என்ன…?

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில் 2011ஆம் ஆண்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அனைத்து கிரிமினல் மேல்முறையீடு வழக்குகளையும் நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்தார். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவகாரம் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அப்போதைய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டம் கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம். இக்கிராமத்தில் 1992-ம் ஆண்டு சுமார் 655 பேர் வசித்து வந்தனர். இவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் வனத்தை சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

1992-ம் ஆண்டு ஜுன் 20-ம் தேதி சந்தனமரம் வெட்டிக் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாகக் கூறி 155 வனத்துறையினர், 108 போலீஸார், 6 வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய கூட்டுக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். வீடு,வீடாக நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த சில வீடுகள் மற்றும் ஏரிப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அங்கிருந்த 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனையின் போது 18 மலைவாழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் இருந்தது. சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 2012-ம் ஆண்டு வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு, 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தார்.

இந்நிலையில் தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பாக நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன் நேற்று தனது தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 18 பெண்களுக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் விவகாரம் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அப்போதைய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீடு செய்த அனைத்து மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணியில் வேலை வழங்குவதன் மூலமோ அல்லது சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமோ அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யுமாறும் அவர் அரசுக்கு உத்தரவிட்டார்.

Vignesh

Next Post

தூள்...! 3 ஆண்டு பாலிடெக்னிக் படித்தால் 12-ம் வகுப்புக்கு சமம்...! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு...! வெளியான அரசாணை

Sat Sep 30 , 2023
10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்; பத்தாம் வகுப்பிற்குப் பின் பட்டயப்படிப்பு படித்து பின்பு, பி.இ. (B.E.) பட்டப் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு படிப்பு முடித்த மாணவர்கள், +2 படித்து முடித்து, பி.இ. படித்த பாணவர்களுடன் சமமாகக் கருதப்பட்டு, உதவிப் பொறியாளர் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர் என்றும் […]

You May Like