EPF சந்தாதாரர்களுக்கு 8% அதிகமான விகிதத்தில் ஓய்வூதியப் பலன்களை பெற வாய்ப்புள்ளது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாதச் சம்பளம் பெறும் நபர்களின் வருமானத்தின் ஒரு பகுதி வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு ஊழியர் 10 ஆண்டுகளுக்கு EPFO-க்கு பங்களித்திருந்தால், அவர் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர். இந்த ஓய்வூதியம் 58 வயதில் இருந்து கிடைக்கும். சந்தாதாரர் ஒய்வூதிய நிதியில் எத்தனை ஆண்டுகள் பங்களித்துள்ளார், ஒய்வூதியம் பெறுவதற்கு முன்பு 60 மாதங்களுக்கு சராசரி சம்பளம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒரு ஊழியரின் ஓய்வூதிய விகிதம் கணக்கிடப்படுகிறது.
இதில் 59 வயதுக்கு முன்பு ஓய்வூதியம் கிடைக்கும். இ.பி.எஃப்.ஓ. ஒரு ஊழியர் 50 முதல் 58 ஆண்டுகள் வரை ஓய்வூதியம் பெற அனுமதி வழங்குகிறது. எந்தவொரு பணியாளரும் EPFOல் இருந்து 8%க்கும் அதிகமான விகிதத்தில் ஓய்வூதியத்தைப் பெறலாம். இது பலருக்குத் தெரியாது. EPFO அமைப்பு ஒவ்வொரு EPF உறுப்பினருக்கும் UAN ஒதுக்குகிறது. இந்த கணக்கில் பிஎஃப் பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. EPFO விதிகளின்படி, ஓய்வூதியம் பொதுவாக 58 வயதில் வழங்கப்படும். ஆனால், ஊழியர் 58 வயதுக்கு மேல் தொடர்ந்து பணிபுரிந்தால், அவர் ஓய்வூதியத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது 60 வயது வரை ஒத்திவைக்கலாம்.
இந்நிலையில், ஊழியருக்கு ஆண்டுக்கு 4% கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதாவது, ஒருவருக்கு 59 வயதில் ஓய்வூதியம் மற்றும் 4% கிடைக்கும். 60 வயதில் பெற்றால் 8% கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும். இதன் அடிப்படையில், ஓய்வூதிய நிதி பங்களிப்புதான், 58 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கு பயன்படுகிறது. ஆரம்பகாலம் ஓய்வூதியம் 50 முதல் 58 வயது வரை மட்டுமே உள்ள சம்பளத்தின் அடிப்படையிலேயே இருக்கும். ஆனால், முன்கூட்டியே திரும்பப் பெறுவது ஓய்வூதியத்தை 4% குறைக்கிறது. ஒருவர் 10 ஆண்டுகள் பணி முடிந்து, 50 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், அவர் ஓய்வூதியம் பெற முடியாது. அவர் வேலையை விட்டு வெளியேறிய பிறகு EPFல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை பெறுவார்கள். 58 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகே ஓய்வூதியம் கிடைக்கும்.
Read More : ஒரு மாதத்திற்கு இதை மட்டும் சாப்பிடாம இருந்து பாருங்க..!! அந்த அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!!