பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற e-kyc அப்டேட் செய்வதற்கு கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது.
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் (PMKISAN) திட்டத்தில் சேர்ந்த நாளிலிருந்து 1 முதல் 14 தவணைகள் வரை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. e-KYC என்பது மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அல்லது விவசாயியை தெரிந்து கொள்ளுங்கள் என்பதன் சுருக்கம் ஆகும். ஆகவே பி.எம்.கிசான் திட்டத்திற்கு e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 15-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். e-kyc அப்டேட் செய்வதற்கு இன்று கடைசி நாள். இதன்படி முதல் வழிமுறையாக தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் www.pmkisan.gov.in தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து OTP மூலம் சரி பார்த்திடலாம்.
PM KISSAN e-kyc அப்டேட் செய்வதற்கு தபால் நிலையத்தை அணுகி முடிக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் அனைவரும் நில ஆவணங்களை தங்கள் பகுதி வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தில் இந்த பணிகளை மேற்கொள்ளலாம். பொதுசேவை மையங்களில் அல்லது தபால் நிலையத்தை அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க சம்மந்தப்பட்ட வங்கி கிளையை அணுக வேண்டும் .