fbpx

வக்பு திருத்த மசோதா.. 288 பேர் ஆதரவு… 232 பேர் எதிர்ப்பு…! நள்ளிரவு 2 மணிக்கு நிறைவேறிய மசோதா…!

வக்பு திருத்த மசோதா, 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகியது. சுமார் 13 மணி நேரத்துக்கு மேல் தொடர் விவாதம் நடந்து இரவு 2 மணியளவில் மசோதா நிறைவேறியது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதுடன், அவற்றின் நிர்வாகத்தை திறம்படச் செய்வதும் இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம். தற்போது, வக்பு வாரியத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் புதிய மசோதாவின் கீழ், இந்த வாரியத்தின் உறுப்பினர்கள் அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்படுவார்கள்.

புதிய மாற்றத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் வக்பு வாரியத்தில் உறுப்பினர்களாகலாம், குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருப்பது கட்டாயம். இது தவிர, வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம் என்று இந்த புதிய மசோதா முன்மொழிகிறது. வக்புக்கான சட்டத் திருத்தத்தை, வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கம் செய்கிறது. எனினும், இந்தியாவின் முஸ்லிம் சமூகமும், எதிர்க்கட்சிகளும் இதை கடுமையாக எதிர்த்தனர்.

இந்த நிலையில் வக்பு திருத்த மசோதா, 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகியது. சுமார் 13 மணி நேரத்துக்கு மேல் தொடர் விவாதம் நடந்து இரவு 2 மணியளவில் மசோதா நிறைவேறியது.

English Summary

Waqf Amendment Bill.. 288 people in favor… 232 people against…! The bill was passed at 2 am.

Vignesh

Next Post

பெண்களின் காதுகள் ஆண்களை விட மிகவும் கூர்மையானவை!. ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்!

Thu Apr 3 , 2025
Women's ears are much sharper than men's!. Shocking information in the study!

You May Like