fbpx

எச்சரிக்கை!… சர்க்கரை அதிகமாக சேர்த்துக்கொள்பவரா நீங்கள்?… அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்!

சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீங்கு மற்றும் பிரச்சனைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நமது ஆரோக்கியம் மற்றும் நாம் வயதாகும் விதம் ஆகியவற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் உணவுமுறை மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே, உணவை சரியான அளவு படி, எடுத்துக்கொண்டாலே போதும் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சி என்கிற பழமொழி நம்மளுடைய உணவு முறையிலும் பொருந்தும். எனவே, எது எடுத்துக்கொண்டாலும் அளவாக எடுத்துக்கொள்ளவேண்டும். நாம் தினமும் உபயோகம் செய்யும் உணவு பொருட்களில் பல நமக்கு தீங்குகளை விளைவித்து வருகிறது.

அதில் மிக முக்கியமான ஒன்று நாம் விரும்பி உபயோகம் செய்யும் சர்க்கரை (Sugar) இதனை நமது வாழ்க்கையில் தினமும் காபி, பால், இனிப்பு வகைகளை செய்வதற்கு என அனைத்திற்கும் உபயோகம் செய்து வருகிறோம். ஆனால் அத்தகைய சர்க்கரையின் அதிகப்படியாக உட்கொள்வதால் ஏற்படும் தீங்குகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இதனை அதிகமாக எடுத்துக்கொள்வதால் பல பிரச்சனைகள் நமது உடலில் ஏற்படுகிறது.

ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத அதிகப்படியான சர்க்கரை உணவுகளை உட்கொள்வது இதய நோய்கள் ஏற்படுத்துவதற்கான அபாயத்தை உண்டாக்கிறது. சர்க்கரை பானங்களை உட்கொள்வது இரத்த அழுத்தத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. மேலும் அதிகப்படியான சர்க்கரை கல்லீரலால் கொழுப்பாக மாற்றப்படுகிறது. இது போன்ற காரணங்களால் இருதய அமைப்பு மோசமான ஆரோக்கியமாக மாறுகிறது.

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது. இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும், இது இரத்தத்தில் இருந்து குளுக்கோஸை உயிரணுக்களுக்கு கொண்டு செல்வதை எளிதாக்குவது. குறுகிய கால இன்சுலின் எதிர்ப்பை மாற்றியமைக்க முடியும் என்றாலும், நாள்பட்ட ஹைப்பர் இன்சுலினீமியா நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதிக அளவு சர்க்கரையை உபயோகம் செய்யாதீர்கள்.

நமது மூளை அதன் செயல்பாட்டிற்காக நமது குளுக்கோஸின் பாதியை பயன்படுத்துகிறது. போதுமான அளவு சர்க்கரையின் அளவு நியூரான்கள் மற்றும் நரம்பு செல்களுக்கு இடையேயான தகவல்தொடர்புகளில் முறிவுக்கு வழிவகுக்கும். இந்த தேவையை பூர்த்தி செய்ய போதுமான கார்போஹைட்ரேட்டுகள் தேவை, இருப்பினும் அதிகப்படியான சர்க்கரை எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அதிக சர்க்கரை உட்கொள்வது மூளையின் அறிவாற்றலை பாதிக்கிறது.

அது மட்டுமின்றி நியாபகம் மறதி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நமது சருமம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதைப் பொறுத்தது. எனவே, சர்க்கரையை அதிக அளவு உட்கொள்ளல் கொலாஜனின் குறுக்கு இணைப்புக்கு வழிவகுக்கிறது மற்றும் தோல் மிகவும் கடினமாகிறது. அதிகப்படியான சர்க்கரை உபயோகம் செய்வதால் முகப்பரு, தோல் சுருக்கம், குறிப்பாக கன்னம் மற்றும் கழுத்தைச் சுற்றி தொங்குதல் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுகிறது.

Kokila

Next Post

சூப்பர் திட்டம்...! மகளிருக்கு அரசு வழங்கும் 60% மானியம்‌...! எப்படி பெறுவது..? முழு விவரம் இதோ...

Sun May 14 , 2023
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம்‌ ரூ.20.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ வாங்கிடும்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த அலங்கார மீன்‌ வளர்ப்பு அலகு (நன்னீர்‌ மீன்களை இனப்பெருக்கம்‌ மற்றும்‌ வளர்த்தல்‌) ரூ.25.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தில்‌ பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ […]

You May Like