fbpx

“இத செஞ்சா மட்டும் போதும்.! ஸ்ரீராமரை கஷ்டப்படுத்தாதீங்க.”! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் உருக்கமான வேண்டுகோள்.!

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ஸ்ரீ ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகின்ற 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி கரசைவ அவர்களால் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு பிரதமர் மோடியின் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்தப் பணிகள் தற்போது நிறைவு பெற்றிருக்கும் நிலையில் மூன்று அடுக்குகளை கொண்ட ராமர் கோவில் வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகத்துடன் தொடங்க இருக்கிறது.

இந்த விழாவிற்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என ராமர் கோவில் அறக்கட்டளை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார் .

மேலும் சிறு ராமரின் பக்தர்கள் ஆகிய நாம் அவருக்கு தொந்தரவு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு ஜனவரி 22 ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து ஸ்ரீ ராமருக்காக விளக்கு ஏற்றுமாறு வேண்டுகோள் வைத்துள்ளார். ஜனவரி 23ஆம் தேதியில் இருந்து பொதுமக்கள் கோவிலை தரிசிக்க வரலாம் எனவும் தனது வேண்டுகோளில் கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

Next Post

"டிசைன் டிசைனா ஆட்டைய போடுறீங்களே."! பெண்ணிடம் நூதன முறையில் 3 லட்ச ரூபாய் திருட்டு.! ஆட்டோ டிரைவர் அதிரடி கைது.!

Sat Dec 30 , 2023
சென்னையைச் சேர்ந்த மூதாட்டியை ஏமாற்றி மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். சென்னை வியாசர்பாடி அடுத்துள்ள சாமியார் தோட்டம் 1-வது தெருவில் வசித்து வருபவர் இன்பச் செல்வி(53). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ராஜேஷ் என்பவரின் ஆட்டோவில் […]

You May Like