PM Modi: கிராமி விருதை வென்ற இந்திய-அமெரிக்க பாடகி சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இருக்கும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் (Grammy Awards) வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் வழங்கப்படும் கிராமி விருதுக்கு இசை கலைஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான 67வது ‘கிராமி விருதுகள்’ (Grammys 2025) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சந்திரிகா டாண்டன் என்பவர் ‘த்ருவேனி’ என்ற பாடலுக்காக ‘Best New Age Album’ என்ற பிரிவில் விருது வென்றிருக்கிறார். மேலும் பலர் விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், கிராமி விருதை வென்ற இந்திய-அமெரிக்க பாடகி சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்திய கலாச்சாரத்தின் மீது அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதும், அதைப் பிரபலப்படுத்த அவர் பாடுபடுவதும் பாராட்டுக்குரியது என்று பிரதமர் கூறினார். ஒரு தொழில்முனைவோர், கொடையாளர் மற்றும் நிச்சயமாக இசை என அவரது சாதனைகள் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்! இது ஒரு சிறந்த சாதனை” என்று பிரதமர் மோடி X இல் பதிவிட்டு சந்திரிகா டாண்டனை வாழ்த்தினார். 2023 இல் நியூயார்க்கில் அவரைச் சந்தித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.”
பிரதமர் மோடியின் வாழ்த்துக்களுக்கு சந்திரிகா டாண்டனும் நன்றி தெரிவித்தார். “ஒவ்வொரு மட்டத்திலும் நான் நன்றியுள்ளவளாகவும் பாக்கியம் பெற்றவளாகவும் உணர்கிறேன். இந்தப் பாதையை அமைத்த கடவுளுக்கு நன்றி, இவ்வளவு அன்பான செய்திக்கு பிரதமர் மோடிக்கு நன்றி! என்று குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிகா டாண்டன் உலகளாவிய வணிகத் தலைவரும் முன்னாள் பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயியின் மூத்த சகோதரி ஆவார். அவர் தனது சக ஊழியர்களான தென்னாப்பிரிக்க புல்லாங்குழல் கலைஞர் வௌட்டர் கெல்லர்மன்ஸ் மற்றும் ஜப்பானிய செல்லிஸ்ட் இரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து இந்த விருதை வென்றார். சந்திரிகா டாண்டன் ரெக்கார்டிங் அகாடமியால் அங்கீகரிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2011 ஆம் ஆண்டு, சமகால உலக இசைப் பிரிவில், ஆன்மீக இசையை உள்ளடக்கிய ‘சோல் கால்’ என்ற அவரது ஆல்பத்திற்காக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அந்த வருடம் அவர் எந்த விருதையும் வெல்லவில்லை என்றாலும், தற்போது ‘திரிவேணி’ என்ற ஆல்பத்தின் மூலம் வெற்றி பெற்றார்.
Readmore: உலக புற்றுநோய் தினம் 2025!. இளைஞர்களிடையே புற்றுநோய் அதிகரிப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்!.