விஜய் நீட் தேர்வு குறித்து பேசிய கருத்துகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் எங்களுக்கு நீட் தேர்வு அவசியம் என கருதுவதாகவும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஒரு மாணவியின் தாய், பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவியின் தாய் கூறுகையில், ”விஜய் சொன்னது போல் உலகம் மிகவும் பெரியது என்பது உண்மை. அதில், நீட் மட்டுமே வாழ்க்கை இல்லை. மருத்துவம்தான் படிக்க வேண்டும் என்றில்லை. எத்தனையோ துறைகள் இருக்கின்றன. எல்லா துறைகளிலுமே முன்னால் வரலாம். எடுத்த துறைகளில் யார் 100 சதவீதம் உழைப்பை கொடுக்கிறார்களோ அவர்கள் முன்னுக்கு வருகிறார்கள்.
நீட் நீட் என்ற மாயையை உருவாக்க வேண்டாம் என எனக்கு தோன்றுகிறது. நீட்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அது யாருக்கும் தெரிவதில்லை. என் கணவரும் மருத்துவர்தான். எனினும் விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்கு நீட் வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்” என்று அந்த கூட்டத்தில் விருது வாங்கிய மாணவியின் தாயார் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : மாணவர்களே..!! நாளையே கடைசி..!! விண்ணப்பிக்க சூப்பர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!