fbpx

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் டேட்டிங் செய்வதாக சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்படுகிறது. இந்த ஜோடியின் உறவு பற்றி பல ஊகங்கள் இருந்தபோதிலும், இருவரும் காதலில் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும், தற்போது விஜய் தேவரகொண்டா பிரபல ஆங்கில் இதழுக்கு அளித்த பேட்டியில் தனது ரிலேஷன்ஷிப் நிலையை உறுதிப்படுத்தினார்.

அந்த பேட்டியில், “எனக்கு 35 …

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தமிழ்நாட்டை விளையாட்டுக்கான தலைநகராக்கும் வகையில் அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஹாக்கி வீரர்களின் கோரிக்கையை ஏற்று கோவையில் சர்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவையின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் 200 கோடி ரூபாயை அறிவித்துள்ளார். ஏற்கனவே முதல்வர் …

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய், தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அவருடைய 69-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எச்.வினோத்தை பொறுத்தவரை அவர் எடுக்கும் படங்கள் எதாவது ஒரு வகையில் …

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேமுதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரில் தேமுதிக பிரமுகர் கண்ணதாசன் இல்ல திருமண விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் தவெக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. …

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, அரசியல் மேற்படிப்பு படிக்க லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தவெக தலைவர் விஜய் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பை அடுத்து, திமுகவை தவிர வேறு எந்த …

மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேச்சைத் தொடங்கினார். அதேநேரம் அவர் தனது பேச்சில் அதிகமாக திமுகவையே விமர்சித்தார். செல்லூர் ராஜூ பேசுகையில், “இப்போதெல்லாம் சும்மா நாலு படம் …

சினிமாவில் வசூல் மன்னனாக ஜொலித்த நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தவெக கட்சியை அறிவித்து ஒப்புக் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு அரசியல்வாதியாக ஈடுபடப் போவதாக அறிவித்தார். அதன்படி, அக்கட்சியில் கொடியும், கொடிப்பாடலும் வெளியானது. இதைத்தொடர்ந்து தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டை வெற்றிக் கொள்கைத் …

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீதான கத்தி குத்து சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் …

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி-சாலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டில் திமுகவையும் பாஜகவையும் விமர்சித்தன் மூலம் அவர்களோடு கூட்டணி இல்லை என மறைமுகமாக மெசேஜ் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசி இருப்பது, அதிமுக, விடுதலை …

நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”விஜய் என்ன பெரிய தலைவரா..? ஜெயலலிதா, கருணாநிதி இருந்த காலத்திலேயே கட்சியை தொடங்கியவன் நான். ஜெயலலிதா, கருணாநிதியைவிட விஜய் பெரிய தலைவரா..? அவர்கள் கூட்டாத கூட்டத்தையா விஜய் கூட்டிவிட்டார். விஜய்யால் எனக்கு வாக்கு வங்கி பாதிக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நான் …