fbpx

களைகட்டிய அம்பானி வீட்டு கல்யாணம்..!! படையெடுத்த பிரபலங்கள்..!! அட இவரு கூடவா..?

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட முன்னணி பாலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற காட்சிகள் தற்போது வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகியுள்ளன.

உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால், ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிகள் கடந்த மார்ச் மாதம் முதலே களைகட்ட தொடங்கிவிட்டன. அந்த வகையில், நேற்றைய தினம் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிவுட் படங்கள் தோற்றுப் போகும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிரபல அமெரிக்க பாடகரான ஜஸ்டீன் பீபர் பாடல்களை பாடி அசத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அட்லீ மற்றும் பிரியா அட்லீ ரன்வீர் சிங் அணிவது போல கலர் கலரான உடைகளை அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளனர். கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூருடன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். தீபிகா படுகோன் சமீபத்தில் கல்கி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், மும்பையில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் பிரபல தியேட்டர் ஒன்றுக்கு சென்று கல்கி திரைப்படத்தை பார்த்த காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சிக்கும் தனது கணவருடன் தீபிகா படுகோன் சென்றார். சல்மான் கான், கரீனா கபூர், சைஃப் அலி கான் என பல பாலிவுட் பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Read More : BREAKING | ”அண்ணனின் பிறந்தநாளன்றே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்”..!! கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்..!!

English Summary

The Anand Ambani – Radhika Merchant Sangeet, featuring many leading Bollywood actors and celebrities, is now out in videos and photos.

Chella

Next Post

மேடையில் விஜய்யை கோபப்படுத்திய மாணவியின் தந்தை..!! புஸ்ஸி ஆனந்த் பார்த்துருந்தா அவ்வளவு தான்..!! வைரலாகும் வீடியோ..!!

Sat Jul 6 , 2024
He became angry with the student's father for abusing Vijay. The related video is currently going viral on social media.

You May Like