fbpx

திருச்சியில் பயங்கரம்: மேற்கு வங்க இளைஞரை குத்திக் கொன்ற திருச்சியின் பிரபல ரவுடி!

திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே  மேற்கு வங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு  இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து  திருச்சி கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதும்  அவர் திருச்சியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வேலை செய்தார் என்பதும் தெரிய வந்தது  இந்நிலையில் அவரை யார் எதற்காக கொலை செய்தார்கள் என்ற காரணம் தெரியவில்லை. இதனால் காவல்துறை தீவிரமான விசாரணையை முடுக்கி விட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும்  ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அந்த காட்சிகளில் மூன்று மர்ம நபர்கள் அந்த இளைஞரை குத்தி விட்டு செல்வது  பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த சிசிடிவி காட்சியில் உள்ள அடையாளங்களை வைத்து தேடுதல் வேட்டையை தொடங்கியது காவல்துறை.  இந்நிலையில்  இன்று காலை சந்தேகத்திற்கு இடமான  ஒரு பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்தது காவல்துறை . அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அந்த இளைஞரை குத்திக் கொன்றது இவர்கள் தான் என  உண்மையை ஒத்துக் கொண்டனர். இதனையடுத்து மூன்று பேரின் மீது  கொலை வழக்கு பதிவு செய்து  சிறையில் அடைத்தது காவல்துறை.

மேலும் இந்த விசாரணையில் இறந்து போன மேற்குவங்க இளைஞரின் பெயர்  விக்ரம் என்பதும் அவர் உறையூர் அருகே உள்ள  தனியார் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.  இந்த விக்ரமுக்கு  தீபிகா என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் தீபிகா  திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடியான வேந்தக்கை பாலா மற்றும் கணேசன் ஆகியோருடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். வெந்தகை பாலா கணேசன் மற்றும் விக்ரம் ஆகியோருக்கு இடையேயும்  நல்ல நட்பு இருந்திருக்கிறது. ஆனால்  வெந்தகை பாலாவிற்கு தீபிகா விக்ரமோடு பழகுவது பிடிக்கவில்லை. இதன் காரணமாக  வெந்தகை பாலா, கணேசன் மற்றும் தீபிகா ஆகிய மூவரும் சேர்ந்து  மேற்கு வங்கத்தைச் சார்ந்த விக்ரமை கோட்டை ரயில்வே நிலையம் அருகே வைத்து  குத்தி படுகொலை செய்துள்ளனர். இந்தக் கொலைக்கு தீபிகாவும் உடனடியாக இருந்திருக்கிறார்.

Rupa

Next Post

ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த பழைய பெண் திருடர்கள்! திருநெல்வேலியில் கைது! கயத்தாறு போலீசார் அதிரடி!

Wed Feb 8 , 2023
நெல்லை மாவட்டம் கயத்தாறு போலீசார்  மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸை தனியார் காரில் விரட்டி பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சார்ந்தவர் செய்யது அலி பாத்திமா இவர் தனது தாயாருடன்  கயத்தாறு பகுதியில் ஒரு துக்க வீட்டிற்காக  திருநெல்வேலி இருந்து மதுரை சென்ற  அரசு பேருந்தில் சென்றிருக்கிறார். கயத்தாறு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இவர்  தனது மணி பர்ஸை தேடிய […]

You May Like