fbpx

’இவரு சொன்னது அப்படியே நடந்துருக்கு’..!! இந்தாண்டு உலகக்கோப்பையை வெல்வது 1987இல் பிறந்த கேப்டன் தான்..!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை 1987ஆம் ஆண்டு பிறந்த கேப்டன் ஒருவரே கைப்பற்றுவார் என்று பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.

பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ, ஏற்கனவே டென்னிஸ் மற்றும் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை வென்ற வீரர்கள் மற்றும் அணிகளை சரியாக கணித்தவர். அதேபோல் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதையும் சரியாக கணித்தார். இதற்கு முன்பாக டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் தொடர்களை 1986இல் பிறந்த ரஃபேல் நடால் வெல்வார் என்று கணித்தார். அதன்படி ரோஜர் ஃபெடரர் சாதனை நடால் முறியடித்தார்.

பின்னர், 1986இல் பிறந்தவர்களின் சாதனையை 1987இல் பிறந்தவர்கள் முறியடிப்பார்கள் என்று கூறியிருந்தார். அதன்படி, 1986இல் பிறந்த நடாலின் சாதனையை, 1987இல் பிறந்த ஜோகோவிச் முறியடித்தார். அதேபோல் 2018 கால்பந்து உலகக்கோப்பையின் போது 1986இல் பிறந்த கேப்டன் வெல்வார் என்று கிரீன்ஸ்டோன் லோபோ கணித்தார். அதன்படி, 1986ல் பிறந்த ஹூயுகோ லோரிஸ் தலைமையிலான பிரான்ஸ் அணி வென்றது.

கடந்தாண்டு நடைபெற்ற 2022 கால்பந்து உலகக்கோப்பையின் போது 1987இல் பிறந்தவர்கள் வெல்வார்கள் என்று கணித்தார். அதன்படி, 1987இல் பிறந்த லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. அதேபோல் 2019இல் கிரிக்கெட் உலகக்கோப்பையின் போது 1986இல் பிறந்த கேப்டன் வெல்வார் என்று கணித்தார். அதன்படி, 1986இல் பிறந்த இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது.

தற்போது உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், 1987ஆம் ஆண்டில் பிறந்த கேப்டன் வெல்வார் என்று கணித்துள்ளார். அதன்படி பார்த்தால், வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் 1987, மார்ச் 24ஆம் தேதி பிறந்துள்ளார். அதேபோல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 1987, ஏப்ரல் 30ஆம் தேதி பிறந்துள்ளார். இதனால், இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

அவசரத்துக்கு உதவும் டோல்கேட் ரசீது!… இனி தூக்கி எறியாதீர்கள்! தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

Fri Oct 6 , 2023
நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதாவது நேஷனல் ஹைவேஸ் ரோட்டில் (NHAI) செல்லும் போது கொடுக்கும் பணம். டோல்கேட் கிராஸ் செய்வதற்கு மட்டும் அல்ல. சுங்கச் சாவடியைக் கடக்கும் போது, வாகனத்துக்கு ஏற்ப பணத்தைக் கட்டி ரசீது பெற்றுக் கொள்வோம். அதை பத்திரமாக வைத்து கொள்ளவும், எதற்கு என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். குறிப்பாக சுங்கச்சாவடிகளில் நீங்கள் கொடுக்கும் பணம், உங்க பயணம் எந்த சிரமும் […]

You May Like