fbpx

ரெட்டை சுழி இருந்தால் ரெண்டு பொண்டாட்டியா.? இதன் அறிவியல் உண்மை என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

பொதுவாக அனைவருக்கும் தலையின் உச்சியில் ஒற்றை சுழி இருக்கும். மிகவும் அரிதாகவே சிலருக்கு இரட்டை சுழி அமைந்திருக்கும். இப்படி இரட்டை சுழி அமைந்திருந்தால் அதிகமாக சேட்டை செய்வார்கள் என்றும் அவர்களுக்கு இரண்டு மனைவி அமையும் என்றும் கிராமப்புறங்களில் கூறுவது உண்டு. ஆனால் அறிவியல் ரீதியாக இரட்டை சுழி எதனால் வருகிறது மற்றும் இதற்குப் பின் இருக்கும் அறிவியல் காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

அறிவியல் ஆய்வுகளின் படி உலக மக்கள் தொகையில் 5% அவர்களுக்கு மட்டுமே இது போன்ற இரட்டை சுழி அமைந்திருக்கிறது. மேலும் இந்த இரட்டை சுழி ஏற்படுவதற்கு ஜீன்கள் தான் முக்கிய காரணம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடும்பத்தில் முன்னோர்கள் யாருக்கும் இரட்டை சொல்லி இருந்தால் அது வாரிசாக வருங்கால சந்ததியினருக்கு வரலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவே இரட்டை சுழி வருவதற்கான அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

மேலும் இரட்டை சுழி இருந்தால் இரண்டு மனைவி என்றும் இரட்டை சுழி இருப்பவர்கள் அதிகம் சேட்டை செய்வார்கள் என்பவை நிரூபிக்கப்படாத கட்டுக் கதைகளாகும். இவற்றிற்கு எந்தவித அறிவியல் ஆதாரங்களும் இல்லை என மருத்துவர்கள் அடித்து கூறுகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தின் படி இரட்டை சுழி இருப்பவர்கள் பொறுமையானவர்களாகவும் பிறருக்கு நன்மை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கிறது. மேலும் தங்களை சுற்றி இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனவும் தெரிவிக்கிறது.

Next Post

இது வரை இல்லாத அளவில்... அதுவும் ஒரே நாளில்...! தமிழக பதிவுத்துறையில் புதிய சாதனை...! என்ன தெரியுமா...?

Sat Dec 16 , 2023
ஒரே நாளில் ரூ.192 கோடி வசூல் செய்து தமிழக பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்வது வழக்கம். சுபமுகூர்த்த […]

You May Like