fbpx

#Tn Govt: தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் வழங்கப்படும்…?

உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சென்னை இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் வெளிச்சந்தை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 1 கிலோ வெங்காயம் ரூ.30 என்ற விலையில் விற்கப்படுவதை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடினார்கள். அமுதம் மக்கள் அங்காடி மூலம் சென்னையில் 10 அங்காடிகளில் வெங்காயம் மலிவு விலையில் விற்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை அங்காடிகளுக்கு 2.28.191 மெ.டன் அரிசி. 19,170 மெ.டன் சர்க்கரை, 5,321 மெ.டன் கோதுமை, 10,972 மெ.டன் துவரம் பருப்பு, 1 கோடியே 12 இலட்சம் பாமோலின் பாக்கெட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பொருள்கள் இரண்டு நாள்களில் அனுப்பி முடித்து வைக்கப்படும்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை ஒதுக்கீட்டின்படி கிடங்கில் இருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டிருப்பதையும், அங்காடிகளில் போதுமான அளவு இருப்பு வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நல்ல தரத்துடன் சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருவதையும், சென்னை தரமணியில் உள்ள அமுதம் நியாயவிலை அங்காடிகளில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

Vignesh

Next Post

#Breaking: கனமழை காரணமாக மதுரையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...!

Thu Nov 9 , 2023
கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள உத்தரவில்; மதுரையில் பெய்து வரும் கன மழை காரணமாக, மாணவர்கள் நலன் […]

You May Like