fbpx

அரிக்கொம்பன் யானையை எங்குதான் விடுவது? கோர்ட் சொல்லியது இதைத்தான்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரிக்கொம்பன் யானையை, அது நன்கு அறிந்த கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அரிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. கேரளா அரசு அரிசி கொம்பனை கும்கியாக மாற்ற முயற்சி செய்தது. ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள், நீதிமன்றத்திற்கு சென்றதால், அரிக்கொம்பனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அரிக்கொம்பன் யானையை பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதுதான் யானை கம்பம் பகுதியில் நுழைந்தது. சின்னக்கானல் பகுதியிலும் ஏராளமான ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்புகளால் யானையின் வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாலயே அது ஊருக்குள் நுழையும் நிலை உருவானது. சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர் அரிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்ப்பதோடு, மீண்டும் அந்தப் பகுதியிலேயே யானையை விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசு பல லட்சம் செலவு செய்து யானையை பிடித்துள்ளது. சில விஷயங்களில் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் நிபுணர்கள் இல்லை. ஆகவே இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

Maha

Next Post

பாயாசத்துனால சண்டையா? பெரிய அக்கப்போரால இருக்கு..!!!

Tue Jun 6 , 2023
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. மனமகிழ்ச்சியோடு நடந்துமுடிந்த நிச்சயதார்த்த விழாவிற்கு பிறகு, மணமக்களின் உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது, பந்தியின் போது மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டாரை சேர்ந்த இளைஞர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்கள் முதலில் லேசான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக […]

You May Like