தன்னுடைய மனைவியுடன் இனி பேசக்கூடாது என்று கண்டிஷன் போட்ட கள்ளக்காதலியின் கணவனை, கொடூரமான முறையில் கொலை செய்த நபரால், சேலம் அருகே பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
தலைவாசல் அருகில் உள்ள வீரகனூர் பகுதியில் வசித்து வரும் செல்வம், சத்யா என்ற தம்பதிகளுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். சத்தியா ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடை முதலாளியான செல்வராஜ் என்பவருக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது இருவருக்கும் இடையில் கள்ளக்காதலாக மாறியது.
இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம், செல்வராஜின் மனைவி தாராவிற்கு தெரியவந்ததை தொடர்ந்து, இதனை அவர் கடுமையாக ஆட்சேபித்தார். இந்த நிலையில் கள்ளக்காதலியின் மீது ஏற்பட்ட அதீத மோகம் காரணமாக, தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தன்னுடைய மனைவி தாராவை, செல்வராஜ் கொடூரமான முறையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொலை செய்ததாக தெரிகிறது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட செல்வராஜ் சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். செல்வராஜ் வெளியே வந்ததை அறிந்து கொண்ட சத்தியாவின் கணவர் செல்வம் ,தன்னுடைய மனைவி சத்யாவுடன் நீ பேசக்கூடாது என்று செல்வராஜிடம் கண்டிப்பாக கூறியுள்ளார்.
இதன் காரணமாக, செல்வத்தை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட செல்வராஜ், நேற்று முன்தினம் பேருந்து நிலையத்திற்கு அருகே நின்று கொண்டிருந்தபோது, அவரை எதிர்பாராத நேரத்தில், சரமாரியாக வீச்சரிவாளால்,வெட்டி, படுகொலை செய்து விட்டு, அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனைக்காக, உயிரிழந்த செல்வத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு நடுவே, காவல் நிலையத்திற்கு சென்ற செல்வராஜ், செல்வத்தை கொலை செய்து விட்டதாக தெரிவித்து சாரணடைந்துள்ளார்.