மத்திய அரசு ‘பாரத் அட்டா’ மற்றும் ‘பாரத் ரைஸ்’ விற்பனையின் இரண்டாம் கட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நுகர்வோருக்கு மலிவு விலையில் தரமான அரிசி மற்றும் மாவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம்.. ஏதேனும் அடையாள அட்டை காட்ட வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கு இருக்கும்.. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய அரசு நாட்டு மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் ஏழை எளிய மக்கள் அரசின் இந்தத் திட்டங்களின் பயனைப் பெறுகிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மாவு மற்றும் அரிசி வழங்கும் புதிய முயற்சியை கடந்த ஆண்டு அரசு தொடங்கியது. பணவீக்கம் அதிகரித்து வருவதைக் கண்ட இந்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் அரிசி மற்றும் மாவு வழங்கத் தொடங்கியது. இதற்காக பாரத் அட்டா என்ற பெயரில் மாவும், பாரத் ரைஸ் என்ற பெயரில் அரிசியும் வழங்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரு கிலோ கோதுமை மாவை 27.50 ரூபாய்க்கு அரசு வழங்கியது. அதே சமயம் ஒரு கிலோ அரிசி ரூ.29க்கு வழங்கப்பட்டது. இது NCCF, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் NAFED மூலம் இந்திய அரசின் மத்திய கிடங்கு மூலம் விநியோகிக்கப்பட்டது. தற்போது மீண்டும் குறைந்த விலையில் மக்களுக்கு பாரத் அட்டா மற்றும் பாரத் அரிசியை விற்கத் தொடங்கியுள்ளது அரசு. இந்த மாவு மற்றும் அரிசி NCCF, NAFED மற்றும் சென்ட்ரல் ஸ்டோர் மொபைல் வேன்களில் மக்களுக்கு கிடைக்கும்.
இம்முறை பாரத் அட்டா மற்றும் பாரத் அரிசியின் விலைகள் சிறிதளவு அதிகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விலை சந்தை விலையை விட மிகவும் குறைவாக உள்ளது. இம்முறை பாரத் ஆட்டா விலை கிலோ ரூ.30 ஆகவும், பாரத் அரிசி கிலோ ரூ.34 ஆகவும் உள்ளது. பாரத் அட்டா, பாரத் அரிசி வாங்குவது தொடர்பாகவும் இந்த கேள்வி மக்கள் மனதில் எழுந்து வருகிறது. பாரத் அட்டா, பாரத் அரிசி வாங்க அடையாள அட்டை காட்ட வேண்டுமா? எனவே இது போன்ற எந்த விதியும் உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை. இது தவிர, நீங்கள் ஆன்லைனில் பாரத் ஆட்டாவை வாங்க விரும்பினால், நீங்கள் அதை ஆன்லைனிலும் வாங்கலாம்.
Read more ; ரெஸ்யூம் ரெடி பண்ணிக்கோங்க.. TCS ஐடி நிறுவனத்தில் வேலை..! சென்னையிலேயே பணி..