காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சற்றுமுன் காலமானார் (வயது 75).
பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவரது மகன் ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மகனுமானவர் தான் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர், 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார். சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்ற இளங்கோவன், இளம் வயதிலேயே காங்கிரஸில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார்.
2 முறை காங்கிரஸ் மாநில தலைவர் பதவி வகித்துள்ளார். 1984, 1989 சட்டமன்ற தேர்தல்களிலும், 1996 மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து, 2004 நாடாளுமன்ற தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வானார். பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2009 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், 2014 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கூட்டணியில் இருந்த திமுக உடன் இணக்கமான உறவை கொண்டிருக்காததே அவரது தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தேனி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதன் பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு அவரது மூத்த மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா உயிரிழந்தார். இதையடுத்து, காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக போட்டியிட்டு, அபார வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். ஒரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகன் மற்றும் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Read More : BIG BREAKING | காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!