நரேந்திர மோடி அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று 53 சதவீதம் பேர் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மனநிலையை அறிய Mood of the Nation என்ற கணக்கெடுப்பை C-Voter – இந்தியா டுடே ஆகியவை இணைந்து நடத்தியது. இந்த ஆய்வில், 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ், அரசியல் போட்டியாளர்களை விட தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பில் 53 சதவீதம் பேர் நரேந்திர மோடி அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று 9 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமராக வேண்டும் என்று 7 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்..
எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியின் பங்கு சிறப்பாக உள்ளது என்று 40 சதவீதம் பேரும், 34 சதவீதம் பேர் மோசமாக உள்ளது என்றும் மதிப்பிட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கவும், தலைமை வகிக்கவும், ராகுல் காந்தி பொருத்தமானவர் என்று 23 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்.. 16 சதவீதம் பேர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இருப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.. 14 சதவீதம் பேர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.. 9 சதவீதம் பேர் மட்டுமே பிரியங்கா காந்தி வதேரா காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.