கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. இந்தியாவில் H3N2 வைரஸால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்..
மேலும் H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், சுய சிகிச்சைக்கு பதிலாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம், சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகலாம்.. குறிப்பாக H3N2- பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவு 90 க்குக் குறைவாக இருந்தால் அவர்களை அனுமதிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
H3N2 வைரஸ் தொற்று பெரும்பாலும் காய்ச்சல் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது.. இந்த வைரஸ் நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் காது நோய்த்தொற்றுகள் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். மேலும் ஆஸ்துமா மற்றும் இதய நோய் போன்ற ஏற்கனவே இருக்கும் நோய்களை மோசமாக்கும். ஒரு நபரின் வயது, அவர்களின் பொது ஆரோக்கியம் மற்றும் பிற இணை நோய்கள் ஆகியவை நோயின் தீவிரத்தை தீர்மானிக்கிறது.
சில சந்தர்ப்பங்களில், H3N2 வைரஸ், ஆஸ்துமா மற்றும் இதய நோய் போன்ற ஏற்கனவே இருக்கும் நோய்களை மோசமாக்குகிறது.. எனவே பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். H3N2 நோய்த்தொற்றுகள் வயது, பொது உடல்நலம் மற்றும் பிற நோய்களின் இருப்பு போன்ற மாறிகளைப் பொறுத்து லேசானது முதல் கடுமையானது வரை தீவிரம் கொண்டதாக இருக்கலாம்.
H3N2 மிக விரைவாக மாற்றமடைவதால், காய்ச்சல் தடுப்பூசிகள் அதன் பிறழ்வுகளைத் தொடர்வது மிகவும் கடினம். இதனால் மற்ற இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மாறுபாடுகளை விட H3N2 வைரஸ் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது… எனவே, காய்ச்சல் தடுப்பூசிகள் H3N2 வைரஸுக்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கலாம்.
H3N2 வைரஸ் காய்ச்சலை எப்படி தடுப்பது..? எனவே காய்ச்சலை தடுப்பதற்கான மிகச் சிறந்த உத்தி, சிறந்த சுகாதாரத்தை கடைபிடிப்பது, ஆண்டுதோறும் தடுப்பூசி போடுவது மற்றும் அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.. முகக்கவசம் அணிவது, நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, தும்மல் மற்றும் இருமலின் போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, கண்கள் மற்றும் மூக்கைத் தொடுவதைத் தவிர்ப்பது ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..
காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு பாராசிட்டமால் உட்கொள்வதன் மூலம் H3N2 வைரஸை தடுக்கலாம். மேலும், கைகுலுக்குவதைத் தவிர்க்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் எச்சில் துப்பக்கூடாது, மற்றவர்களுடன் நெருக்கமாக அமர்ந்து சாப்பிடக் கூடாது, மருத்துவ நிபுணரின் ஆலோசனையின்றி ஆண்டி பயாடிக் மருந்துகள் அல்லது பிற மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.