கேரள மாநிலத்தில் தொடுபுழா டிஎஸ்பி அலுவலகத்திற்கு நவ்ஷாத் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டார் கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட அவருடைய மனைவி அப்சானா கைது செய்யப்பட்டிருந்தார்.
மனைவியுடன் உண்டான தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக, வீட்டை விட்டு வெளியேறியதாக நவ்ஷாத் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார். அவரை கொலை செய்து விட்டதாக மனைவி அப்ஷனா ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் தான் உயிருடன் திரும்பி வந்திருக்கும் நௌஷாத் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தான் காணாமல் போன விவகாரம் மற்றும் தேதியும் தனக்கு தெரியாது எனவும், தான் கொலை செய்யப்பட்டதாக அவருடைய அடுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் தனக்கு தெரியாது எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த பகுதியில் நவ்ஷாத் இருப்பதாக தொம்மன் குத்து வாசிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பகுதியைச் சேர்ந்த ஜெயமன் என்பவர் நவ்ஷாத்தை சந்தித்து வெகு நேரம் பேசியிருக்கிறார் ஜெய்மோனிடம் தன்னை தேடுவது எனக்கு தெரியாது என்று தெரிவித்திருக்கிறார். கடந்த 15 மாதங்களாகவே நவ்ஷாத் தன்னுடைய பேசவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது, அவரும் ஃபோனை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
மனைவி அப்ஸனா தனக்கு தீங்கு செய்யலாம் என்ற பயத்தின் காரணமாக, வீட்டை விட்டு சென்று விட்டதாக நவ்ஷாத் காவல்துறையில் தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் தன்னை கொலை செய்ததாக அவள் ஏன் ஒப்புக்கொண்டாள்? என்று தெரியவில்லை என்றும் நவ்சாத் தெரிவித்துள்ளார்