கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரியைச் சார்ந்தவர் பிரகாஷ் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்ட இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றார். அங்கு சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மேரி என்ற மனைவி இருந்தார். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் கணவர் பிரகாஷ் வெளிநாட்டில் இருக்கும்போது அவருடன் வீடியோ கால் மூலம் பேசி வந்திருக்கிறார் மேரி. அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கிறார் பிரகாஷ். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனை அவரது பெற்றோர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே மேரி மிகவும் மனமடைந்து காணப்பட்டுள்ளார். அன்றைய தினம் முழுவதும் யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்திருக்கிறார். கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மேரி திடீரென தனி அறைக்கு சென்றவர் வெளியே வரவில்லை. அறைக்குள் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் வீட்டிலிருந்தவர்கள் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர் அப்போதும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்தவர்கள் கதவை உடைத்து பார்த்த போது மேரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரது பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.