fbpx

கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி எடுத்த மனைவி..!

அர்ஜென்டினா நாட்டில் ஆல்டோஸ் டி சான் லோரென்சோ என்ற குடியிருப்பு பகுதியில் உளவியலாளர் மனைவி ஃப்ளோரென்சியா அமடோ கட்டானியோ(41) எனபவர் தனது இசைக்கலைஞர் கணவரான பெட்ரோ ஃபெடெரிகோ ஜராட்டினாவுடன் வசித்து வருகிறார்.

இருவரும் கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் உள்ளூர் வட்டாரங்கள் அவர்கள் சுமார் 10 ஆண்டுகள் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி Florencia Amado Cattane தனது கணவர் பெட்ரோ-வை உடல் முழுவதும் கத்தியால் குத்தி கிழித்து கடுமையாக தாக்கியுள்ளார். 

அதுமட்டுமின்றி கணவனின் ஆணுறுப்பை வெட்டி எடுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து சம்பவம் அறிந்து குறிப்பிட்ட பகுதிக்கு வந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெட்ரோவின் உடல் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து கொலையாளியான அவரது மனைவி அமடோ கட்டேனியோ-வை ஜனவரி 11ம் தேதி “கைகளில் படிந்த இரத்தக்கறையுடன்” அவரது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட Amado Cattaneo, லா பிளாட்டாவில் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டால், மேற்படி விசாரணை செல்வதில் சாத்தியமில்லை என்று வழக்கறிஞர் மற்றும் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Rupa

Next Post

1 கோடி மக்கள் பட்டினியில் வாடும் அபாயம்…! தன்னார்வ அமைப்புகள் அதிர்ச்சி தகவல்…!

Sat Jan 14 , 2023
ஆப்பிரிக்க நாடான கென்யாவில், தற்போது கடும் வறட்சி காணப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கென்யாவில் மழை பொழிவு சரிவர இல்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் உணவு உற்பத்தி பாதித்துள்ளது. இந்த நிலையில், இந்த  ஆண்டிலும் மழை பொழிவு சராசரி அளவை விட கீழே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் கென்யாவில் நிலவும் வறட்சி குறித்து சமீபத்தில் சில தன்னார்வ அமைப்புகள் ஆய்வில் ஈடுபட்டன. தற்போது […]

You May Like