மும்பை பகுதியில் சாண்டாக்ரூசையில் தொழிலதிபர் கமல்காந்த் மற்றும் காஜல் என்பவருக்கு திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சண்டை காரணமாக கணவனைவிட்டு சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த காஜல், சென்ற ஜூன் மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ தொங்கியுள்ளார்.
கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் காஜல் சமையல் செய்வதில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அன்று கமல்காந்தின் தாயாருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடலில் பல உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார். இதனையடுத்து அடுத்த மாதத்திலே கமல்காந்துக்கும் வயிற்று வலி ஏற்பட்டது.
அவர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது ரத்தத்தில் ஹெவி மெட்டல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் 17 நாட்களாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்ற செப்டம்பர் 20ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவரின் மரணம் குறித்து குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுப்பிய நிலையில் கமல்காந்தின் சகோதரியான சாண்டாகுரூஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையின் விசாரணையில், மரணத்திற்கு காரணம் காஜல் மற்றும் அவரது காதலர் ஹிதேஷ் ஜெயின் என்பதும் தெரியவந்துள்ளது.
காஜல், இறந்தவர்களின் உணவில் தினமும் மெல்ல மெல்ல உயிரை பறிக்கும் சயனைடுகளை கலந்து கணவர் மற்றும் மாமியார்க்கு அளித்து வந்துள்ளார். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட இருவரின் பேரிலும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி காவல்துறையினர் காவலில் வைத்துள்ளனர்.