fbpx

“சார், என் பொண்டாட்டிய காணோம்…”.! காவல் நிலையத்தில் புகார் அளித்த கணவன்.! மனைவி கொடுத்த ட்விஸ்ட்.!

திருமணமான அடுத்த நாளே மனைவி மாயமானதால் அதிர்ச்சி அடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் அவரது மனைவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

கோவை மாவட்டம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றும் இளம் பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை தொடர்ந்து தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாள் இளம் பெண்ணின் பெற்றோர் தங்களது மகள் வீட்டிற்கு வந்துள்ளனர். மகளுடன் பெற்றோர் பேசிக் கொண்டிருந்தபோது கணவர் வேலைக்கு சென்று இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி மற்றும் அவரது பெற்றோர் மாயமாக இருப்பது குறித்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் தாயாரை அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் தனது காதல் கணவருடன் வாழ இஷ்டமில்லை என அந்த பெண் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Post

நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடி.! மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கேஎன் நேரு அதிரடி பேட்டி.!

Sun Nov 26 , 2023
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நமது நாடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. கடந்த பத்து வருட பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் உன் பின்தங்கி இருக்கிறது. இதன் காரணமாக விலைவாசி அதிகரித்திருப்பதோடு நாட்டின் பணவீக்க விகிதம் பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதன் காரணமாக வர இருக்கின்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை […]

You May Like