இந்தியாவில் 2023 ஜூன் 13 தேதி நிலவரப்படி ஒட்டு மொத்த நிலக்கரி இருப்பு 110.58 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இருப்பான 76.67 மில்லியன் டன்னுடன் ஒப்பிடுகையில், 44.22% என்னும் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி இருப்பு அதிகரித்துள்ளதால் விநியோகத்தை தடையின்றி பராமரிக்க வழி ஏற்பட்டுள்ளது.
இதே போல 13.06.2023 நிலவரப்படி 2023-24 நிதியாண்டில், மின்சாரத் துறைக்கு நிலக்கரி அனுப்பும் விசயத்தில் 164.84 மில்லியன் டன் என்னும் ஒட்டு மொத்த அளவில் சாதனை படைத்தது இந்தியா. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 5.11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.