fbpx

“புருஷன்னு கூட பாக்காம இப்படியா பண்றது…” கடித்துத் துப்பிய மனைவி.! ஒட்ட வைக்க முயற்சி.! வினோத சம்பவம் .!

தலைநகர் டெல்லியில் கணவரின் காதை மனைவி கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி சுல்தான்புரி பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான சுக்ராம் பாண்டே. இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்வதற்கு முடிவு செய்து இருக்கிறார் அவரது மனைவி.

இது தொடர்பாக வீட்டை விட்டு தனக்கு சேர வேண்டிய பங்கை கொடுக்கும்படி கணவரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் சண்டையாக மாற இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த சண்டையில் ஆத்திரமடைந்த அவரது மனைவி சுக்கிராம் பாண்டேவின் காதை கடித்து துப்பி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரது காதையும் எடுத்துக் கொண்டு சுக்ராம் பாண்டேவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரது காதை ஒட்ட வைப்பதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுக்ராம் பாண்டேவின் மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

பெரும் சோகம்..!! 'தில்லானா மோகனாம்பாள்’ புகழ் பொன்னுசாமி காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

Tue Nov 28 , 2023
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ஒலித்த நாகஸ்வர இசையை தனது சகோதரர் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து இசைத்த நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி மதுரையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. 1968ஆம் ஆண்டு வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, பாலையா, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்தார். கே.வி.மகாதேவன் இசையில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும், இந்த […]

You May Like