fbpx

பகீர்.!! 16 வயது சிறுமி; 5 வருடம்; தொடர் பாலியல் வன்புணர்வு தந்தை, மகன் கைது.! 2 லட்ச ரூபாய்க்கு விற்ற உறவினர்.!

தந்தை மற்றும் மகனால் தொடர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்களிடமிருந்து தப்பி வந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தந்தை, மகன் மற்றும் அந்தப் பெண்ணின் உறவினர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பெண் தனது குடும்பத்தின் வறுமை காரணமாக தனது உறவினரிடம் உதவி கேட்டு இருக்கிறார். அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி அந்த பெண்ணை டெல்லிக்கு அழைத்துச் சென்ற உறவினர் ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த 32 வயது நபரிடம் 2 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்திற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற நபர் தனது தந்தையுடன் சேர்ந்து சிறுமியை தொடர் பாலியில் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கர்ப்பமடைந்து சிறுமிக்கு குழந்தையும் பிறந்து இருக்கிறது. அவர்களது தொடர் சித்திரவதை பொறுத்துக் கொள்ள முடியாத பெண் 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களிடம் இருந்து தப்பி வந்து காவல்துறையில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை மீட்ட காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் ஹரியானவை சேர்ந்த தந்தை மகன் மற்றும் அந்தப் பெண்ணை விற்பனை செய்த அவரது உறவினர் ஆகியோரின் மீது போக்சோ சட்டம் ஆள் கடத்தல் மற்றும் கற்பழிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Post

’எங்கடா சாப்பாட்டுல நல்லி எலும்பை காணோம்’..!! ’கல்யாணம் நடக்காதுடா’..!! பெரும் பஞ்சாயத்து..!!

Tue Dec 26 , 2023
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஜக்தியாலைச் சேர்ந்த இளைஞருக்கு திருமணம் செய்யப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண விருந்தில் என்னென்ன உணவுகள் பரிமாறப்பட வேண்டும் என மணமகன் வீட்டினர் பட்டியல் கொடுத்துள்ளனர். அதில், ஆட்டின் நல்லி எலும்பும் இருந்திருக்கிறது. இதற்கிடையில், திருமணத் தேதியும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்தன்று, பரிமாறப்பட்ட உணவில் நல்லி எலும்பு இல்லை என்பதை அறிந்த மணமகன் வீட்டார், ஆத்திரமடைந்துள்ளனர். இது குறித்து மணமகள் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். விருந்தில் […]

You May Like