fbpx

“யாருகூட டா போன் பேசுற” தனியாக சென்று செல்போன் பேசிய கணவர்; ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர செயல்..

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே துரைச்சாமிபுரம் உள்ளது. இங்கு 23 வயதான தினகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு 23
வயதான பிரியா என்ற மனைவி உள்ளார். வீட்டில் இருக்கும் பிரியா அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இத்தனை கவனித்த தினகரன் அதிக நேரம் செல்போனில் பேச கூடாது என்று கூறி பிரியாவை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தினகரன் வீட்டில் இருக்கும் போது, அவரது செல்போனிற்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது தினகரன், செல்போனை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே சென்று பேசியுள்ளார்.

இதனை பார்த்த பிரியா, நான் செல்போன் பேச கூடாது என்று கண்டித்து விட்டு, நீ மறைமுகமாக வெளியே சென்று செல்போன் பேசலாமா என்று கேட்டு ஆத்திரமடைந்துள்ளார். மேலும், யாருடன் தனியாக செல்போன் பேசுகிறாய் என்று வாக்குவாதம் செய்த அவர், அவரது கணவரிடம் இருந்த செல்போனை பறித்து கீழே வீசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன், கீழே கிடந்த தனது செல்போனை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது பிரியா, தான் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தனது கணவரை குத்தியுள்ளார். இதில், அவறது கை மற்றும் நெஞ்சில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தினகரன் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், பிரியா மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more: பெற்றோர்களே கவனம்!!! சுப நிகழ்ச்சிக்கு சென்ற 8 வயது சிறுமிக்கு, 55 வயது போட்டோகிராபரால் ஏற்பட்ட சோகம்..

English Summary

woman killed her husband who spoke in phone

Next Post

கண்ணாடி பாலத்தை திறந்து வைத்து, இயற்கை அழகை நடந்து ரசித்த முதல்வர் ஸ்டாலின்…!

Mon Dec 30 , 2024
Chief Minister Stalin opened the glass window and enjoyed the natural beauty...

You May Like