fbpx

“குழந்தைகளை விட, கள்ளக்காதலன் தான் முக்கியம்” 2 வயது பிஞ்சு குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய்..

புதுக்கோட்டை மாவட்டம், கிடாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திலோத்தமா. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, இவர் முனியன் என்ற நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு தர்ஷிகா என்ற இரண்டு வயது மகளும், மாதவன் என்ற பத்து மாத ஆண் குழந்தையும் உள்ளனர். ஒரு கட்டத்தில், திலோத்தமாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த திலோத்தமா, தனது குழந்தைகளை தூக்கிக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

ஆனால் திலோத்தமாவின் தாய், தனது மகளை கண்டித்து மீண்டும் உனது கணவர் வீட்டிற்க்கு சென்று விடு என்று அறிவுரை கூறியுள்ளார். ஆனால் திலோத்தமாவிற்கு, அவரது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. இதனால் அவர், திருச்சிக்கு சென்று தனது 10 மாத ஆண் குழந்தையை பணத்திற்காக பெண் ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது 2 வயது மகளான தர்ஷிகாவை, கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த முனியன், சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முனியன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், திலோத்தம்மாவை கைது செய்து, கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் நடந்தவற்றை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, திருச்சியில் விற்கப்பட்ட 10 மாத குழந்தையை போலீசார் மீட்டு, காப்பகம் ஒன்றில் அனுமதித்தனர். கள்ளக்காதலுக்காக தாய் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more: பெற்றோர்களே எச்சரிக்கை!! செல்போனைப் பார்த்து, 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது அண்ணன்..

English Summary

woman killed her own children for illicit relationship

Next Post

மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகும் தேங்காய் பால்..!! இப்படி பயன்படுத்தி பாருங்க..!! சூப்பர் ரிசல்ட்..!!

Tue Jan 21 , 2025
The fatty acids in coconut milk convert the bad cholesterol in our body into good cholesterol.

You May Like